வானிலை நிலவரம் குறித்த முக்கிய எச்சரிக்கை!

இன்று (30) மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரைக் தாண்டிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
Follow & Share




