இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டத்திற்காக இறக்குமதி!

இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டத்திற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட 104 புதிய பேருந்துகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் மெட்ரோ போக்குவரத்துத் திட்டம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் போது இப்பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளன.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி இலகுவாக ஏறி இறங்கும் வகையில் குறைந்த தரைப் பேருந்துகளாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்து அனுபவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நவீன பேருந்து சேவை தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அதிகாரிகள் விரைவில் வெளியிடவுள்ளனர்.
Follow & Share




