ஈரானிய இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களால் உலகளாவிய பொருளாதாரத்தில் அச்சம்!

ஜோர்டானிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியிலுள்ள கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் பாரிய தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈராக்கில் இயங்கும் ஈரான் சார்புக் குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க – ஈரான் பதற்றத்திற்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் முற்றிலுமாகத் தகர்ந்துள்ளதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow & Share




