தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தீவிரம் – மக்கள் அவதானம்!

வடக்கு, வட-மத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் பலத்த காற்றுத் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் மீது நிலவும் தீவிர தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக, வடக்கு, வட-மத்திய, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Follow & Share




