பேராதனை பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் தொடங்கும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், அந்தத் தேதியிலிருந்து கல்வி நடவடிக்கைகள் பாதுகாப்பாகவும் வழக்கம் போலவும் தொடர்வதை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.
பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தங்களது தங்குமிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
Follow & Share




