LATEST
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்! சவூதி பாகிஸ்தான் துருக்கி ஒன்றிணைவு பாதுகாப்பில் புதிய அத்தியாயம்! இடியுடன் கூடிய மழை மின்னல் குறித்து எச்சரிக்கை! பேராதனை பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு! மண்சரிவு அபாயம் காரணமாக அவசர எச்சரிக்கை! இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு ஜப்பானின் புதிய பங்களிப்பு! இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் – இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு 2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆரம்பம் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்! சம்பள உயர்வு இல்லை என திட்டவட்டமாக கூறிய பிரதி அமைச்சர்! சவூதி பாகிஸ்தான் துருக்கி ஒன்றிணைவு பாதுகாப்பில் புதிய அத்தியாயம்! இடியுடன் கூடிய மழை மின்னல் குறித்து எச்சரிக்கை! பேராதனை பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு! மண்சரிவு அபாயம் காரணமாக அவசர எச்சரிக்கை! இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு ஜப்பானின் புதிய பங்களிப்பு!
உள்ளூர்

மண்சரிவு அபாயம் காரணமாக அவசர எச்சரிக்கை!

August 7, 2026 · National Tamil LK

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச செயலகப் பிரிவுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை, கொத்மலை மேற்கு, அம்பகமுவ, நுவரெலியா, நோர்வுட் மற்றும் கொத்மலை கிழக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, தெரனியகல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ, பன்வில, மெததும்பர, உடபலாத, கங்க இஹல கோரள, உடுதும்பர மற்றும் தெல்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, ஓபநாயக்க மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›