LATEST
மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்! மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை ஏற்றம்! எண்ணெய் விலை மீண்டும் உச்சம்! 22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் – விசாரணை தொடர்கிறது! கடல் கொந்தளிப்பு – கரையோர மக்களுக்கு அவதானம்! காணாமல் போன 17 வயது மாணவிகள் கண்டுபிடிப்பு! பெருந்திரளான மக்கள் கூடினால் என்னை சிறையில் அடைப்பார்கள் – நாமல்! ஹட்டன் – கொழும்பு வீதியில் பாறைகள் சரியும் அபாயம்! மில்டன் பெரேராவின் மகன் பிரியங்கர பெரேரா காலமானார்! மத்திய கிழக்கு பதற்றம்; எண்ணெய் விலை ஏற்றம்! எண்ணெய் விலை மீண்டும் உச்சம்! 22வது திருத்தத்திற்கு எதிரான மனுக்கள் – விசாரணை தொடர்கிறது! கடல் கொந்தளிப்பு – கரையோர மக்களுக்கு அவதானம்! காணாமல் போன 17 வயது மாணவிகள் கண்டுபிடிப்பு! பெருந்திரளான மக்கள் கூடினால் என்னை சிறையில் அடைப்பார்கள் – நாமல்! ஹட்டன் – கொழும்பு வீதியில் பாறைகள் சரியும் அபாயம்!
உள்ளூர்

கடல் கொந்தளிப்பு – கரையோர மக்களுக்கு அவதானம்!

September 2, 2026 · National Tamil LK

மழை நிலைமை : சிலாபத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

கடல் நிலை : ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related Stories

Explore More ›