LATEST
குடிநீர் தட்டுப்பாடு – 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! அநுரவின் மக்கள் பேரணி; ரணிலின் 80ஆம் ஆண்டு விழா – இன்று முக்கிய நிகழ்வுகள்! சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த திமோர்-லெஸ்டே செல்லும் இலங்கை குழு! பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பிரதமர்! உலக அரங்கில் இலங்கையை உயர்த்திய ருமேஷ் தரங்க! இன்று நண்பகல் 5 இடங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்! கடலோரப் பகுதியில் சட்டவிரோத கட்டமைப்புகள் மீது நடவடிக்கை! மலையகத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் – திகாம்பரம்! குடிநீர் தட்டுப்பாடு – 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! அநுரவின் மக்கள் பேரணி; ரணிலின் 80ஆம் ஆண்டு விழா – இன்று முக்கிய நிகழ்வுகள்! சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த திமோர்-லெஸ்டே செல்லும் இலங்கை குழு! பூட்டான் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பிரதமர்! உலக அரங்கில் இலங்கையை உயர்த்திய ருமேஷ் தரங்க! இன்று நண்பகல் 5 இடங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்! கடலோரப் பகுதியில் சட்டவிரோத கட்டமைப்புகள் மீது நடவடிக்கை! மலையகத் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் – திகாம்பரம்!
உள்ளூர்

அநுரவின் மக்கள் பேரணி; ரணிலின் 80ஆம் ஆண்டு விழா – இன்று முக்கிய நிகழ்வுகள்!

September 6, 2026 · National Tamil LK

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட மக்கள் பேரணித் தொடர் இன்று (06) முதல் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் களுத்துறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்தப் பேரணித் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய, முதலாவது மக்கள் பேரணி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு புளத்சிங்கள பகுதியில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது பேரணி பிற்பகல் 03.30 மணிக்கு பேருவளையில் நடைபெறவுள்ளது.

இதற்கு மேலதிகமாக பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டும் எதிர்வரும் நாட்களில் பேரணிகளை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையிலுள்ள ‘சிறிகொத்த’ கட்சித் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

Related Stories

Explore More ›