LATEST
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சொகுசு வாகன வழக்கு ஒக்டோபர் 28க்கு ஒத்திவைப்பு! இலங்கை–தாய்லாந்து உறவுகளை வலுப்படுத்த இணக்கம்; விசா விலக்கை விரைவுபடுத்த கவனம்! மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு! இலங்கையை வீழ்த்தி T20 தொடரில் 1-0 முன்னிலை பெற்ற இங்கிலாந்து! ஜப்பானில் புதிய சாதனை: 100 வயதை கடந்தோர் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தை தாண்டியது செப்டம்பர் 24 FCID ஆஜர் – இன்று சிங்கப்பூர் பயணம்! வானிலை மாற்றம் – மழை தாக்கம் குறைந்தாலும் எச்சரிக்கை தொடர்கிறது! 2027 நிதி ஒதுக்கீட்டு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில்!
உலகம்

மக்காவை நோக்கி ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஹவுதி ட்ரோன் இடைமறித்து அழிப்பு!

September 16, 2026 · National Tamil LK

இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை நோக்கி ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்தி ஒன்றை, வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

மக்காவுக்கு தெற்கே வைத்து, தடைசெய்யப்பட்ட வான்பரப்பிற்குள் நுழைவதற்கு முன்னரே குறித்த ஆளில்லா வானூர்தி வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.

மக்கா மற்றும் மதினா ஆகிய புனித நகரங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது தங்களுக்குச் சிவப்புக் கோடு என கூட்டுப் படை எச்சரித்துள்ளது.

அத்துடன், இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூட்டுப் படை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

Explore More ›