LATEST
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
உள்ளூர்

இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு!

September 25, 2026 · National Tamil LK

இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய வேலைத்திட்டமொன்றுக்குச் செல்வதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது முழுமையாக இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி இவான் பபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.

நாட்டின் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் ஏழாவது மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல்களை நிறைவு செய்யும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்துடனான விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதிகள் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு மதிப்பீடுகளை எதிர்நோக்கவுள்ளது.

ஏழாவது மதிப்பீடு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், எட்டாவது மதிப்பீடும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் என்பது நாட்டிற்குப் பலவந்தமாகத் திணிக்கப்படும் விதிமுறைகள் தொகுப்பு அல்லவென்றும், நாட்டின் அதிகாரிகளால் எதிர்பார்க்கப்படும் இலக்குகளின் அடிப்படையில் அது கட்டமைக்கப்பட வேண்டும் எனவும் இவான் பபஜோர்ஜியோ சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய வேலைத்திட்டம் எதுவுமின்றிப் போயினும், வருடாந்த நான்காவது மதிப்பீடுகள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதித்துறை மதிப்பீடுகள் ஊடாக இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் ஏழாவது மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல்கள் நிறைவடைந்த போதிலும், இதுவரை எத்தகைய அலுவலக மட்டத்திலான இணக்கப்பாட்டையும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›