LATEST
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
உள்ளூர்

நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம்

September 25, 2026 · National Tamil LK

எதிர்வரும் கல்வி ஆண்டுக்கான பாடசாலைப் பாடநூல்களை விநியோகிக்கும் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான பாடநூல்களை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு சிக்கல்களை எதிர்கொண்ட தரம் 6 க்கான புதிய ஆங்கிலப் பாடத் தொகுதி தற்போது முழுமைப்படுத்தப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது.

இவற்றுடன் தரம் 2 க்கான புதிய பாடத் தொகுதியின் அச்சிடுதல் மற்றும் விநியோகப் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் எதிர்வரும் ஆண்டுக்கான தரம் 6 பாடத் தொகுதிகளின் விநியோகமும் இடம்பெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் உரிய காலப்பகுதிக்குள் பாடநூல்களைத் தங்குதடையின்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

Explore More ›