நேபாள–திபெத் பேரழிவில் 56 யுக்ரைன் ஆன்மீகப் பயணிகள் குறித்த தகவல் இல்லை.

நேபாளம் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரழிவைத் தொடர்ந்து, கைலாஷ் யாத்திரை மேற்கொண்ட 56 யுக்ரைன் ஆன்மீகப் பயணிகளின் நிலை என்னவென்று தெரியாமல் தொடர்ந்து மர்மமாகவே நீடித்து வருகிறது.
கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த 56 ஆன்மீகப் பயணிகள் குறித்து, பேரழிவு நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை எந்த விதத் தகவலும் கிடைக்கவில்லை.
சீன-நேபாள எல்லையில் அமைந்திருந்த பிரதான குடியேற்ற அலுவலகம் இந்த வெள்ளப்பெருக்கில் முற்றிலும் அழிந்து சாம்பலானது.
இதனால், பயணிகள் நேபாள எல்லைக்குள் நுழைந்தார்களா அல்லது இடைப்பட்ட ஆபத்தான பகுதியில் சிக்கிக் கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
இமயமலைப் பகுதியில் நிலவும் கடுமையான சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு காரணமாக மீட்புக் குழுவினர் தேடுதல் பணியை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களைச் சந்தித்து திணறி வருகின்றனர்.
கடந்த மாதம் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் இதுவரை 1,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




