LATEST
அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்!
உள்ளூர்

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து நோய் அதிகரிக்கலாம் : த.சத்தியமூர்த்தி

November 30, 2025 · Claude

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதில்,

அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள், வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம்.

ஆகவே, கீழ்வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்:

அசுத்தமான நீரில் நடைபயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று வந்தால், சவர்க்காரம் பயன்படுத்தி கை, கால் உள்ளிட்ட உடல் பகுதிகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும். கொதித்து வைத்த நீரைப் பருகுவது சிறந்தது.

வாழ்விடங்களை எப்போதும் தூய்மையாக பேண வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் கவனம் செலுத்தி, நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க வேண்டியது அவசியம்.

வைத்திய சிகிச்சை தேவைப்படும் போது தாமதமின்றி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

Explore More ›