LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

பதவி விலகல் தொடர்பில் ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கை

December 19, 2025 · Claude

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் இதை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையினூடாக இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக எமது முன்னோர்களின் தியாகங்களினால் கட்டமைக்கப்பட்ட ஸ்தாபனமாகும். இதன் பொதுச்செயலாளர் என்ற வகையில் என்னுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவது என்னுடைய நோக்கமல்ல.

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். இதை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அந்த வகையில் ஸ்தாபனத்தை ஜனநாயக முறையில் மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.

இதன் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு தேவையான மாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும். மேலும், தற்போது கட்சியின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. வெகு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும். இதன்மூலம் கட்சியின் செயற்பாட்டு வேகத்தையும் மக்கள் சேவையின் தரத்தையும் அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.

“சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் போது, ஸ்தாபனம் உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

Explore More ›