யாழில். கரையொதுங்கியுள்ள சடலம்

யாழ்ப்பாணத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
பருத்தித்துறை இன்பர்சிட்டி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலம் உருக்குலைந்து அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்படுவதாகவும், சடலத்தை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
Follow & Share




