LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

கை-கால்கள் கட்டி வயோதிப தாய் கொடூரக் கொலை

December 29, 2025 · Claude

கண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.87 வயதுடைய வயோதிப தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயோதிப தாயின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ள நிலையில் ஒரு பிள்ளை வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, வயோதிப தாயின் மருமகள் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் சிலர் வயோதிப தாயை கொலைசெய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

Explore More ›