யாழில் பேருந்து சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர், பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதன்போது தாக்குதலுக்கு இலக்கான சாரதி பயணிகளுடன் பேருந்தை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் வரையில் அழைத்து சென்று, பொலிஸ் நிலையத்தில் தன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயணிகளின் சாட்சியங்களுடன் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதன்பின்னர், சிகிச்சைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow & Share




