LATEST
செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு செப்டம்பர் 30க்குள் முதியோர் இல்லங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்! இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாய் மதிப்பில் சிறிய மாற்றம்! ஊழல் வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்! அர்ச்சுனா இராமநாதனின் எம்.பி பதவிக்கு சவால்: விவாதத்திற்கான திகதியை அறிவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்! அரசியல், அபிவிருத்தி துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த சீனா தயாராக உள்ளது! மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு
உள்ளூர்

மதில் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவருக்கு படுகாயம்

January 19, 2026 · Claude

மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் புதிய காத்தான்குடி பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகாலமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மதில் இடிந்து விழுந்ததினால் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குறித்த வடிகாலமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நேரம் அருகில் இருந்த மதில் இடிந்து விழுந்து குறித்த ஊழியர் படுகாயமடைந்தார்.

தம்புள்ளையைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த ஊழியர் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பும் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்

நீண்ட காலமாக இப்பிரதேசத்தில் அமைக்கப்படாதிருந்த வடிகாலமைப்பு பணிகள் தற்போது நகர சபையின் மேற்பார்வையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›