காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கி மீட்பு

கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட சோதனையின் போது, மிகவும் நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சதுப்பு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ‘போல்ட்’ (Bolt) பகுதியும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




