LATEST
கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!
உள்ளூர்

12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமூக ஊடகத் தடை!

January 29, 2026 · Claude

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என அரசாங்கம் ஏற்கனவே முன்மொழிந்துள்ள நிலையில், அதற்கு இணையாக சமூக ஊடகப் பயன்பாட்டையும் தடை செய்வது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகள் பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில்இ அது தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் குறிப்பிட்டார்.

பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் மூலம் இடம்பெறும் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருவதால்இ சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களைக் கையாள்வதற்காகப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்இ அதற்குக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

Related Stories

Explore More ›