இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவித்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்ப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பிலான நெருக்கடிகள் குறித்து தொடர் அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது.
எந்தவொரு நிலைமைகளுக்கும் முகம்கொடுக்க இஸ்ரேல் அரசு தயாராகவுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தொடர்ச்சியாக தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.
அவசர நிலைமைகளின் போது ஏற்படும் ஏவுகணை தாக்குதல் குறித்தும் கையடக்க தொலைபேசி ஊடாக மக்களுக்கு தகவல் வழங்கப்படும் முறையும் செயற்பாட்டிலுள்ளது. சைரன் ஒலி எழுப்பப்பட்டால், தமக்கு அருகிலுள்ள பாதுகாப்புக் கூடத்தில் தஞ்சமடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow & Share




