LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

February 2, 2026 · Claude

திருகோணமலை நீதிமன்றத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மூவரால் அமைதியான வகையிலான ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் பொதுமக்களால் துரத்தியடிக்கப்பட்டனர்.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணை இன்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த நீதிமன்றிற்கு முன்பாக ஒன்று திரண்ட மூவரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களது உறவினர்களால் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியது.

இந்த நாட்டின் கரையோர பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கட்டளைச்சட்டம் ஒரு பாரதூரமான சட்டமாகும்.

குறித்த சட்டத்தின் மூலமான அரசியல் பழிவாங்கலாகவே இந்த புத்தர் சிலை விவகாரத்தினிமித்தம் நடைபெற்ற சிறைபிடிப்பினை பார்க்க வேண்டும் என கருதி குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு வருகை தந்த கைதானவர்களது உறவினர்கள் உங்களைப்பேன்றவர்களே நாட்டில் அமைதியினை குழப்புகின்றனர் எனவும், தொடர்ச்சியாக சிறையில் இருப்பவர்களை பார்வையிட வருவதால் சிறையிருப்பவர்களது உறவினர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் பார்வையாளர் நேரங்களில் கூட பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கருத்து முரண்ப்பட்டபின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

Explore More ›