LATEST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!
உள்ளூர்

சட்டவிரோத மீன்டியினை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம்.

February 13, 2026 · Claude

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் இன்று (13) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு சிறுதொழில் மீனவர்கள் வாழ்வு பாதிப்பு, சட்டவிரோத தொழிலை தடைசெய், சட்டவிரோத தொழில் நடவடிக்கைக்கு எதிராக அனுர அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்வாங்காதே என பல கோசங்களுடன் நடைபவனியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு வருகைதந்து போராட்ட கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களிடம் கையளித்தனர்.

தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் ஊடகங்களுக்கும் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 20 வீதமானவர்கள் மீன்பிடித்துறையில் ஈடுபட்டுள்ளதாகவும், சுமார் 71 km க்கும் அதிகமாக கடல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மீன் வளம் சட்டவிரோத முறையில் அழிக்கப்படுவதாகவும், தற்போதய அரசாங்கத்தின் கொள்கையாக இயன்றவரை சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதாகும் என தெரிவித்துடன், எமது மாவட்டத்தில் மீன்பிடி துறை பிரச்சனையிலும் பார்க்க அதிகமாக இருந்த போதைப்பொருள் பிரச்சனை தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போராட்டகாரர்களின் கோரிக்கையினை தாம் அரசாங்கத்திற்கு அனுப்புவதாகவும் அரசாங்கத்தின் கோரிக்கைகள் மீனவர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

Explore More ›