LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

“கம்பன் புகழ் பாடும் கதிரவன்” மட்டக்களப்பில் கம்பன் விழா.

March 31, 2026 · Claude

இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான 2ஆம் ஆண்டு கம்பன் விழா, மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன் கார்டன் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் திரு. த. இன்பராசா அவர்களின் தலைமையில், கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட காலை அமர்வு அயோத்தி அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும், Sri Lanka Got Talent – Season 03 நிகழ்ச்சியில் தனது அசாதாரணமான மனக்கணித திறமையால் அனைவரையும் கவர்ந்த 07 வயது சிறுமி காவியஸ்ரீ சுப்ரமணியம், மாவட்டத் தேர்வுகள், தேசிய நடுவர் சுற்றுகள், Cull Round, Quarter Finals மற்றும் Semi Finals ஆகியவற்றை வெற்றிகரமாக கடந்து, பொதுமக்களின் வாக்குகளின் மூலம் Pre-Finals நிலைக்கு முன்னேறியுள்ளார்.

இவரது சிறப்பான சாதனையைப் பாராட்டி, “மனிதக் கணிப்பான்” (Human Calculator) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இதனையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் திரு. சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களும் இச் சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Stories

Explore More ›