அதிக விலைக்கு அரிசி விற்பனைக்கு முற்றுப்புள்ளி: நாடு முழுவதும் கடும் சுற்றிவளைப்பு!

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிய, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு முழுவதும் தொடர்ச்சியான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக, இன்று பிலியந்தலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Follow & Share




