LATEST
சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் சகலதுறை வீரர் ஹசரங்க அணியிலிருந்து வெளியே அனோஜனை மீட்க தமிழரசுக் கட்சியின் இராஜதந்திர முயற்சி! விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற ட்ரம்ப் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை மேலும் தொடரும்! சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு! சாரதி மருத்துவச் சான்றிதழ் பெறும் நடைமுறை மேலும் எளிதாகிறது! சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் சகலதுறை வீரர் ஹசரங்க அணியிலிருந்து வெளியே அனோஜனை மீட்க தமிழரசுக் கட்சியின் இராஜதந்திர முயற்சி! விமான நிலையத்திலேயே ஜி ஜின்பிங்கை வரவேற்ற ட்ரம்ப் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை மேலும் தொடரும்! சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு! சாரதி மருத்துவச் சான்றிதழ் பெறும் நடைமுறை மேலும் எளிதாகிறது!
உள்ளூர்

சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி!

September 24, 2026 · National Tamil LK

திவுலபதான விவசாய நிலப் பிரச்சினை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிப்பதாகக் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய சாணக்கியன் எம்பி, குறித்த காணி விவகாரத்தில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் அரசியல் செய்யப்படுவதாகவும், விவசாயிகளுக்கு மாதந்தோறும் 10,000 ரூபா வழங்கி விவசாயம் எதுவும் செய்யாமல் பொய்யான தகவல்கள் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஜனாதிபதியின் உத்தரவுகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில்லை என்றும், குறித்த நிலங்களில் சட்டவிரோத விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, பால் பண்ணை மாடுகள் கொல்லப்படுவதாகவும், இதற்குப் பின்னணியில் அநுராதா யஹம்பத் உள்ளிட்ட குழுவினர் இயங்குவதாகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் லால் காந்த, எம்பி சாணக்கியன் இராசமாணிக்கத்தின் கருத்துகளை உறுதிப்படுத்தியதுடன், இப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்காக நாடாளுமன்றக் குழு அறை இலக்கம் 8 இல் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட தரப்பினர் புறக்கணிப்பு?மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள், அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் எம்பி சாணக்கியன் இராசமாணிக்கம் தரப்பினர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ள போதிலும், பல தசாப்தங்களாக இந்தப் பிரச்சினையினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுச் சட்டப் போராட்டங்களை நடத்தி வரும் திவுலபதான பாரம்பரிய விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் எவரும் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

பாதிக்கப்பட்ட உண்மையான தரப்பினரை சேர்க்காமல் நடத்தப்படும் இவ்வாறான கூட்டங்களின் முடிவுகள் எந்தளவுக்கு நியாயமானதாக இருக்கும் என அநுராதா யஹம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். அநுராதா யஹம்பத்தின் பதில் மற்றும் வரலாற்றுப் பின்னணிஇக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அநுராதா யஹம்பத், இராசமாணிக்கம் எம்.பி.யின் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாகத் தெரிவித்தார். 30 வருடகால யுத்த காலத்தில் எல்லைப்புறக் கிராமமாக இருந்த திவுலபதான பிரதேசத்தில் வாழ்ந்து, யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சிங்கள மக்களுக்காகச் சட்டப் போராட்டம் நடத்துவதும், கிழக்கின் சிங்கள மக்களைப் பாதுகாப்பதும் தனது வரலாற்றுப் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் மகாவலி அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்ட இப் பாரம்பரிய விவசாயிகளின் காணிகளை மீட்கும் சட்டப் போராட்டத்தில் நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு வெற்றிகள் பெறப்பட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு அரசியல் செல்வாக்குகள் காரணமாக அந்த நீதிமன்ற உத்தரவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நிலங்களில் சிங்கள விவசாயிகள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வாழ்ந்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளமையினாலேயே நீதிமன்ற உத்தரவுகளைப் பெற முடிந்தது என்றும், பின்னநாட்களில் தமிழ் பண்ணையாளர்களால் அக்காணிகள் ஆக்கிரமிக்கப்பட்ட போதிலும், அதன் பாரம்பரிய உரிமை கிழக்கு சிங்கள விவசாயிகளுக்கே உரித்தானது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 30 வருடகால யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட திவுலபதான மக்கள், இன்று மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களினாலும் தமிழ் அரசியல்வாதிகளினாலும் எதிர்கொள்ளும் இந்த அநீதிக்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்றும் அநுராதா யஹம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

Explore More ›