LATEST
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஐநா அமைதிப்படையினரை சாதுரியமாக மீட்ட இலங்கை விமானப்படை! மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும்.
உள்ளூர்

களுவாஞ்சிகுடியில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே வாக்குவாதம்

January 15, 2026 · Claude

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் நேற்று இரவு இளைஞர்கள் மீது போக்குவரத்து பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது.

பிரதான வீதியில் வீதிச்சோதனை நடாத்திய நிலையில் உள்வீதியில் நின்ற போக்குவரத்து பொலிஸாரே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து பொலிஸார் மின்விளக்கு அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது அதனை மீறிச்சென்றவர்களை நிறுத்த முற்பட்டபோது இந்த நிலைமை ஏற்பட்டதாக பொலிஸா ர்

தெரிவித்துள்ள போதிலும் அவர்களை தலைக்கவசத்தினால் தாக்கி இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் போக்குவரத்து பொலிஸார் தாக்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு காரிலும் பொலிஸ் வாகனத்திலும் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளபோதும் கெல்மட்டினால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அவர்கள் விழுந்த நிலையிலும் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் இது பொலிஸாரின் அராஜகமான செயற்பாடுகள் எனவும் இதன்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்டதுடன் தாக்குதல் தொடர்பில் இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›