நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று (25) பிற்பகல் 3 மணியளவில் பரநதன் பூநகரி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நாவல்ப்பழ வியாபாரத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்ட பொழுது பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலியாகிய சிறுவன் கிளிநொச்சி உருத்திரபுரம் – எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த நிரோசன் லக்சன் என்ற சிறுவனே விபத்தில்பலியாகியுள்ளான்.
குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




