LATEST
மனித கட்டுப்பாட்டை மீறிய AI? OpenAI சோதனையில் அதிர்ச்சி! தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தீவிரம் – மக்கள் அவதானம்! கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு புதிய திட்டம்! டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு! மனித-யானை மோதலுக்கு முற்றுப்புள்ளியா? மூங்கில் உயிரி வேலிகளுக்கு சீனாவின் தொழில்நுட்ப ஆதரவு! ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்! மனித கட்டுப்பாட்டை மீறிய AI? OpenAI சோதனையில் அதிர்ச்சி! தென்மேற்கு பருவப்பெயர்ச்சி தீவிரம் – மக்கள் அவதானம்! கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு புதிய திட்டம்! டெங்கு பரவல் வேகம் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை சாலை விபத்துகள் அதிகரிப்பு – 4 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழப்பு! மனித-யானை மோதலுக்கு முற்றுப்புள்ளியா? மூங்கில் உயிரி வேலிகளுக்கு சீனாவின் தொழில்நுட்ப ஆதரவு! ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
உள்ளூர்

இன்று முதல் வானிலையில் மாற்றம்! மழையும் பலத்த காற்றும் குறித்து முக்கிய அறிவிப்பு.

July 28, 2026 · National Tamil LK

இன்று (28) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைப் பொழிவு சற்று அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறட்சியான வானிலையே காணப்படும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

Explore More ›