கொழும்பு மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!

இலங்கை வானூர்திப் படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம், இன்று காலை 10.00 மணிக்குத் திறக்கப்பட உள்ளது.
இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த மறுசீரமைப்புப் பணிகள், ரூ. 424 மில்லியன் நிதிச் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தரைத்தளத்தை பேருந்து நிறுத்துமிடமாகவும், இரண்டாம் தளத்தை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஓய்வறைகளாகவும், மூன்றாம் தளத்தை நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்காகவும் பயன்படுத்தும் வகையில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Follow & Share




