ஆறு மாவட்டங்களில் வேகமாகப் பரவும் டெங்கு!

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு, அதிக ஆபத்துள்ள வலயங்களை இலக்காகக் கொண்ட விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
குறித்த பிரிவின் விசேட நிபுணர் பிரஷிலா சமரவீர இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 43 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை 26,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 13 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
Follow & Share




