LATEST
UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!
உள்ளூர்

கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்

April 18, 2026 · Claude

இலங்கைக்கு  புதுமடம் கடற்கரையில் இருந்து    படகில் கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.91 லட்சம் மதிப்பிலான 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் மற்றும் சிகரெட்டை கடத்தி வர பயன்படுத்திய  வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த மெரைன் போலீசார் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த புதுமடம் கடற்கரையில் இன்று (18) அதிகாலை சுமார் ஒரு மணி அளவில் புதுமடம் மெரன் போலீசார் மற்றும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகள் இலங்கைக்கு   படகில் கடல் வழியாக கடத்தல் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது  வாகனம் ஒன்றில் இருந்து மூட்டைகளை இறக்கி கடற்கரையில் பதுக்கி வைத்துக் கொண்டு இருந்ததை கண்ட மெரைன் போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க வேண்டும் முயன்ற போது அங்கு இருந்தவர்களில் சிலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை மட்டும் பிடித்து அங்கிருந்த சாக்கு முட்டைகளை சோதனை செய்தபோது 35 முட்டையில் 7 லட்சம் வெளிநாட்டு சிகரெட் இருந்தது தெரிய வந்தது.

இந்த வெளிநாட்டு சிகரெட்கள் இன்று அதிகாலை   படகில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து புதுமடம் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகன் (38)  என்பவரை கைது செய்த மரைன் போலீசார் வெளிநாட்டு சிகரெட் மற்றும் சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து சுங்கத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

 பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் மதிப்பு ரூ. 91 லட்சம் எனவும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

Explore More ›