ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை (24) சபை அமர்வுகள் ஆரம்பமான போது சபாநாயகர் முன்னிலையில் இவ்வாறு அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட எம்.எஸ். அப்துல் வாஸித் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
Follow & Share




