LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை.

February 18, 2026 · Claude

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினத்திலிருந்து கடந்த மூன்று தினங்களான பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் மீண்டும் தாழ்நிலங்களை மழைநீர சூழ்ந்துள்ளது. இதனைவிட கிராமங்களின் உள்ள வீதிகளிலும் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 104.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 52 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமமம் பகுதியில் 63.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 80 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 39.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை உன்னிச்னைக் குளத்தின் நீர்மட்டம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளதாக அக்குளத்திற்கும் பொறுப்பான நீர்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories

Explore More ›