LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உலகம்

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமான சேவைகள் பாதிப்பு

January 23, 2026 · Claude

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்
தேசிய நெடுஞ்சாலையம் மூடப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று பனி குவிந்து கிடப்பதால், தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

மேலும் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள், பனியால் மூடப்பட்டன.

சுமார் 3 மாத வறண்ட காலநிலைக்குப் பின்னர் , தோடாவின் பலேசாவில் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இதேபோல, பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான சேவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன .இண்டிகோ உள்ளிட்ட பல நிறுவனங்களின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்ரீநகரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமானங்கள் தரை இறங்குவதும், புறப்படுவதும் தாமதமாகின்றன. எனவே, பயணிகள் தங்கள் விமானத்தின் நிலை அறிந்து விமான நிலையம் வர வேண்டும்,’ என தெரிவித்துள்ளது.

 

Related Stories

Explore More ›