LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

கச்சதீவு திருவிழா ஆரம்பம்

February 28, 2026 · Claude

கச்ச தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை தேவாலயத்தின் எதிரே உள்ள கொடிமரத்தில் அந்தோணியார் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது.

இந்த கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குதந்தை பத்தி நாதன் கலந்துகொண்டு திருவிழா கொடியினை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜெபரத்தினம் தலைமையில் பங்குத்தந்தைகள் பிராத்தனையில் ஈடுபட்டனர்.

இம்முறை இலங்கையை சேர்ந்த 6ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கச்ச தீவுக்கு சென்றுள்ளதாகவும் , இந்தியாவில் இருந்து 3992 பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

Explore More ›