LATEST
UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!
உள்ளூர்

லொறி பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

April 12, 2026 · Claude

வாரியப்பொல–நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மீரிகம, பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 63 மற்றும் 42 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்த லொறி ஆனமடுவ பகுதியிலிருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு மீரிகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கட்டுப்பொத்த பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுப்பொத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

Explore More ›