மத்திய கிழக்கு நாடுகளுடன் அமைச்சர் விஜித கலந்துரையாடல்

மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றின் வெளிவிவகார அமைச்சர்களுடன் அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக அந்த நாடுகள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து அமைச்சர் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜித ஹேரத், அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவசரகாலத்தில் கோரப்படும் மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை தயங்காது என்று அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
Follow & Share




