நவகமுவ துப்பாக்கிச் சூடு – இருவர் கைது!

நவகமுவ – கொரத்தொட்ட பகுதியில் கடந்த 16ஆம் திகதி நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், குற்றத்திற்கு உதவி செய்தவரும் தெல்கொட மற்றும் வதுரமுல்ல பகுதிகளில் நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டதுடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 21 மற்றும் 29 வயதுடைய ரணால மற்றும் பள்ளம பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




