சட்டவிரோத ஊசி மருந்துகளுடன் ஒருவர் கைது

12 இலட்சம் ரூபா பெறுமதியான நோய்த்தொற்று எதிர்ப்பு ஊசி மருந்துகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக அவை நாட்டிற்கு எடுத்துவரப்பட்டுள்ளன. சுங்கப் பிரிவு அதிகாரிகள் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். 30 வயதான அவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பெங்களுர் நகரிலிருந்து இன்டிகோ விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அவர் கட்டுநாயக்க வந்துள்ளார். அவரிடமிருந்த பயணப் பையில் குறித்த தடுப்பூசிகள் இருந்துள்ளன.
Follow & Share




