LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை

February 10, 2026 · Claude

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – 2025 (2026) தொடர்பான மேலதிக வகுப்புகளை (Tuition Classes) நடத்துவது நாளை (11) நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடியும் வரை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சை அபேட்சகர்களுக்காக மேலதிக வகுப்புகளை நடத்துதல், அந்த வகுப்புகளை வழிநடத்துதல்இ பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவை இதன்போது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், பரீட்சை வினாப்பத்திரங்களில் உள்ள வினாக்களை வழங்குவதாகவோ அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகவோ போஸ்டர்கள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துவதும், அவற்றை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

யாரேனும் ஒரு நபர், நிறுவனம் அல்லது தரப்பினர் இந்த உத்தரவை மீறி செயற்பட்டால், அவர்கள் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.

இந்த உத்தரவை எவரேனும் மீறினால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.

Related Stories

Explore More ›