கடவுச்சீட்டு மற்றும் விசா விநியோகம் வழமைக்கு- கணினி கோளாறு சீர்செய்யப்பட்டது

கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதற்கு காரணமான கணினி அமைப்பிலிருந்த தொழில்நுட்பக் கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 16) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது. இருப்பினும், தற்போது கணினி கட்டமைப்பு முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால், கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனவே, திணைக்களத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் 1962 என்ற துரித அழைப்பிலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow & Share




