LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

15 நாட்களின் பின்னரே தனியார் கல்வி நிலையங்கள் க.பொ.த உயர் தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும்!

February 28, 2026 · Claude

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கல்விப் பொதுத் தரா தர சாதாரண தர பரீட்சையை மாணவர்கள் எழுதி முடித்திருக்கின்றார்கள். தற்போது இப்பிரதேசத்தில் இருக்கின்ற தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுடனும் கலந்து உரையாடியிருந்தேன். இம்முறை கல்வி பொதுத் தர சாதாரண தரம் எழுதிய மாணவர்கள் பரீட்சை எழுதி முடிந்ததும் குறைந்தது 15 நாட்களுக்குப் பின்னர்தான் அவர்கள் அடுத்தகட்டமாக அவர்களது உயர்தரக் கற்றலைக் கொண்டு செல்வதற்கான வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தேன் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை பிரதேச சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தர். இன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனினும் சனிக்கிழமை இன்று கல்விப் பொதுத்தர காடங்களுக்காக புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கின்றது.

எனது பிரதேச சபையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும.; இது எமது எதிர்கால சந்ததியினரைக் கருத்திற் கொண்டு, தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோளை நாம் விடுகின்றோம். எனது பிரதேச சபையால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தற்போது கல்விப் பொதுத்தர சாதாரண தரம் எழுதி இருக்கின்ற மாணவர்கள் மாணவர்களை உயர்தர கற்றலுக்காக வேண்டி 15 நாட்கள் கழிந்த பின்னரே அவர் அவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் கற்றல் செயற்பாடுகளை தொடர்வதற்கு உரிய தனியார் கல்வி நிலையங்கள் முன் வர வேண்டும். இவற்றை மீறி செயற்படும் கல்வி நிலையங்கள் மூடப்படும் என்பதை நாம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு புதிதாக தனியார் கல்வி நிலையங்களில் கற்றலுக்காக இணைகின்ற மாணவர்களுக்கு எது வித முற்படுப்புணர்வுகளையும் இந்த தனியர் கல்வி நிலையங்கள் பெறக்கூடாது.

அவ்வாறு பெற்றால் தனியார் கல்வி நிலையங்களின் அனுமதி பத்திரங்கள் ரத்து செய்யப்படும்.

30 வருட போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் எம் சமூகத்திற்கு இருக்கின்ற ஒரே ஒரு விடயம் கல்விதன். ஆகவே அந்த கல்விக்கு எதிரானவன் நான் இல்லை. கல்வியை சீரான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன்.

எனவே சாதாரண தரம் எழுதிய கையோடு உயர்தர கற்றலை ஆரம்பிக்காமல் மாணவர்களுக்கு குறைந்தது 15 நாட்கள் விடுமுறையை விட்டு அதன் பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் உயர்தரக் கற்றலை ஆரம்பிக்கலாம் என்பதைத் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது தொடர்பில் எனக்கு மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் முறைப்பாடு அளித்ததன் பிரகாரம்தான் இந்த விடயத்தை நான் வெளிக்கொணர்கின்றேன். இதனை தனியார் கல்வி நிலையங்கள் மீறக்கூடாது என்பதை நான் விரும்புகின்றேன். எனவே கல்விக்கு எதிரானவன் நான் இல்லை கல்வி வியாபாரிகளுக்கு தான் நான் எதிரானவனாக இருக்கின்றேன். எனவே நாம் கொண்டு வருகின்ற திட்டங்களில் ஏதாவது சறுக்கல்கள் இடம்பெற்றாலும் அதற்குரிய இறுக்கமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Stories

Explore More ›