இராமநாதன் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்…..

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் பெண்களை அச்சுறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மல்லாகம் நீதவான் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இளாவலை காவல்நிலையத்தில் இன்று காலை முன்னிலையாகிய போது, அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




