பதவியிலிருந்து விலகிய சரத் கணேகொட

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சரத் கணேகொட மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளார்.
திறைசேரி செயலாளரால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. டிமல் அரந்தர இந்த இரு நிறுவனங்களினதும் பதில் தலைவராகச் செயற்படுவார்.
தலைவர் சரத் கணேகொடவுடன் இணைந்து, நிறுவனத்தின் பணிப்பாளர் ரோஹன் குணதிலக்க என்பவரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் பணிப்பாளர் சபைகளிலிருந்து விலகியுள்ளார்.
Follow & Share




