11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை!

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow & Share




