LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

புத்தளம் செல்லும் பிரதான வீதியை திறக்க கோரி கையெழுத்து வேட்டை

January 23, 2026 · Claude

மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறக்க கோரி இன்றைய தினம் (23) காலை முதல் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரில் இருந்து இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்கின்ற பிரதான வீதியை திறந்து மக்களின் பாவனைக்காக விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மத தலைவர்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்ட தோடு, குறித்த வீதியை திறக்கும் நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் மாத்திரம் இன்றி வடக்கு மக்களும் பலன் அடைவார்கள் என தெரிவித்தனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மாத்திரம் இன்றி அனைவரும் தென் பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொண்டு தமது வாழ்வாதார பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வை பெற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட மக்களிடம் பெற்றுக் கொள்ளப்படும் குறித்த கையெழுத்துக்கள் மகஜராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விற்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

குறித்த நிகழ்வில் மத தலைவர்கள்,மீனவ அமைப்புகள்,பொது அமைப்புகள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு கையெழுத்துக்களை இட்டு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›