செயற்கை நுண்ணறிவு குறித்து இலங்கை – ஒன்றிணைந்த முன்னேற்றத்துக்கு தயார்

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கி செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI IMPACT 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று 19 கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவை மனித குலத்தின் நலனுக்காககப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு AI IMPACT 2026 மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதன் அரச தலைவர்கள் அமர்வின் ஆரம்ப நிகழ்வு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
Follow & Share




