LATEST
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி முக்கிய பரிவர்த்தனைகளில் TIN சமர்ப்பிப்பு கட்டாயம்! நாடளாவிய பாடநூல் விநியோகம் அதிகாரப்பூர்வமாக தொடக்கம் இலங்கையின் அடுத்த IMF முடிவு அரசாங்கத்தின் பொறுப்பு! நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி! மழை காரணமாக ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு சாணக்கியனின் குற்றச்சாட்டுகளுக்கு அநுராதா யஹம்பத் பதிலடி! ஹபீப் ரிஃபான் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

September 25, 2026 · National Tamil LK

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லீட்ஸ் ஹெட்டிங்லி (Headingley) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி , முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் அபாரமாக விளையாடி 100 பந்துகளில் 121 ஓட்டங்களை (14 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள்) பெற்றுக் கொண்டார்.

அத்துடன், கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 48 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலு சேர்த்தனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் கஸ் அட்கின்சன் மற்றும் ரெஹான் அஹமட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குப் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதனால் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

இங்கிலாந்து அணி தரப்பில் டொம் பேன்டன் (73), ஜோஸ் பட்லர் (69) மற்றும் பென் டக்கெட் (67) ஆகியோர் அணிக்காக அதிகபட்ச ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், தில்ஷான் மதுஷங்க மற்றும் இஷான் மலிங்க தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமனாக்கியுள்ள நிலையில் இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›