LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

மஹிந்த பராக்கிரம திஸாநாயக்காவிற்கு புதிய நியமனம்

January 8, 2026 · Claude

கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமனம்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (08) முற்பகல் கையளித்தார்.

கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க, கடல்சார் மற்றும் விநியோகத் துறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அனுபவம் வாய்ந்த நிபுணராவார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான மாநாடு உட்பட சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடனும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த புதிய பதவியில் அவர் கௌரவ அடிப்படையில் பணியாற்ற இணைந்துள்ளார்.

Related Stories

Explore More ›